Prayers
Velankanni Matha
மகா பரிசுத்த கன்னிகையே, இயேசுவின் தாயாராயிருக்குமாறு நித்தியமாக பரிசுத்த மூவொறு கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்ட தூய மணியே! கடவுளுடைய திருப்புதல்வன் உமது திரு உதரத்தில் அவதாரமான போதும், ஒன்பது மாதமளவாக அவரை உமது மாசனுகாத கருவில் தாங்கிய போதும், நீர் அடைந்த பேரின்பத்தை உமது ஏழை ஊழியனாகிய அடியேன் உமக்கு நினைவூட்டுகிறேன். எனது அன்பினாலும், செபங்களாலும் நீர் அப்போது அனுபவித்த இன்பத்தை மீண்டும் புதிப்பிக்கவும், கூடுமானால் அதிகரிக்கவும் விரும்பிகிறேன். 
துன்பப்படுகிறவர்களுக்கு இரக்கம் மிகுந்த அன்னையே! நீர் அப்போது அனுபவித்த இப்பெருமகிழ்ச்சியைக் கொண்டாடுபவர்களுக்கு நீர் வாக்களித்துள்ள விசேஷ உதவியையும், பாதுகாப்பையும் எனக்கு இத்துன்ப நேரத்தில் தந்தருளும். உமது தெய்வப் புதல்வனுடைய அளவற்ற வல்லமையில் நம்பிக்கை கொண்டுள்ளேன். கேட்பவருக்கு அளிப்பதாக அவர் தந்த வாக்குறுதியை நினைத்து, உமது பெரும் வல்லமை நிறைந்த மன்றாட்டுக்களில் உறுதி கொண்டுள்ளேன். இந்த நவநாளின் போது நான் செய்யும் விண்ணப்பங்களை கடவுளுடைய திருச்சித்தத்திற்கு ஏற்றவையானால் அவரிடம் பரிந்து பேசி அடைந்து தந்தருளும். நான் கேட்கும் மன்றாட்டுகள் கடவுளுடைய திருவிருப்பத்திற்கு மாறானதாயிருந்தால் எனக்கு எவ்வரம் மிகவும் தேவையோ அதையே அடைந்து தந்தருளும். 
( இங்கு உம் மன்றாட்டு இன்னதெனச் சொல்லவும் ) 
தேவனின் தாயே! இப்போது உமக்கு வணக்கமாக நான் செய்யும் இந்நவநாளை உம்மில் நான் கொண்டிருக்கும் பெரும் நம்பிக்கையை காட்டுவதற்காகவே செய்கிறேன். இயேசு மனிதனான போது உமது திருவுள்ளம் அடைந்த தெய்வீக மகிழ்ச்சியை நினைத்து அதற்கு வணக்கமாக நான் செய்யும் இந்நவநாளையும் இப்போது நான் சொல்லப்போகும் ‘அருள்நிறை’ செபத்தையும் அன்புடன் ஏற்றுக்கொள்ளும். 
(இங்கு ‘அருள்நிறை’ செபத்தை ஒன்பது முறை சொல்லவும்) 
கடவுளின் மாட்சி பெற்ற அன்னையே ‘அருள் நிறைந்தவள்’ என முதன் முதலில் அதிதூதர் கபிரியேல் சொன்ன போது கொண்டிருந்த பணிவு வணக்கத்துடன் நானும் இவ்வாழ்த்துகளைக் கூறுகிறேன், ஏற்றுகொள்ளும். 
நீர் அணிந்திருக்கும் முடியில் என் செபங்கள் அத்தனையும் விண்மீன்களெனத் துலங்குமாறு விரும்புகிறேன். வருந்துவோர்க்கு ஆறுதலே, நான் உம்மிடம் இப்போது மன்றாடும் விண்ணப்பங்கள் நிறைவேறுமாறு, உமக்கு வணக்கமாக இதுவரை பரிசுத்தவான்களால் செய்யப்பட்ட எல்லா புனித செயல்களையும் ஒப்புக்கொடுக்கிறேன். உமது திருமகனும், எங்கள் ஆண்டவருமான இயேசுநாதருடைய திரு இருதயத்தில் பொங்கி வழியும் பேரன்பையும், அது போன்ற உமது அன்பையும் பார்த்து, ஏழையான எனது செபத்தை ஏற்று என் மன்றாட்டை அடைந்து தந்தருளும் தாயே! ஆமென். 
அர்ச் தேவமாதாவின் பிரார்த்தனை 
சுவாமி கிருபையாயிரும் — சுவாமி கிருபையாயிரும் 
கிறிஸ்துவே கிருபையாயிரும் — கிறிஸ்துவே கிருபையாயிரும் 
சுவாமி கிருபையாயிரும் — சுவாமி கிருபையாயிரும் 
கிறிஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் — கிறிஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும். 
பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா - எங்களை தயை பண்ணி இரட்சியும் சுவாமி 
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா - எங்களை தயை பண்ணி இரட்சியும் சுவாமி 
பரிசுத்த ஆவியாகிய சர்வேசுரா - எங்களை தயை பண்ணி இரட்சியும் சுவாமி 
அர்ச்சிஷ்ட தமத்திருத்துவமாகியிருக்கிற ஏக சர்வேசுரா - எங்களை தயை பண்ணி இரட்சியும் சுவாமி
அர்ச் மரியாயே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 
சர்வேசுரனுடைய அர்ச் மாதாவே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 
கன்னியாஸ்திரீகளின் உத்தம கன்னிகையே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 
மகா அன்பிற்கு பாத்திரமாயிருக்கிற மாதாவே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 
கிறிஸ்துவினுடைய மாதாவே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 
தேவ வரப்பிரசாதத்தின் மாதாவே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 
மகா பரிசுத்த மாதாவே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 
அத்தியந்த விரத்தியாயிருக்கிற மாதாவே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 
பழுதற்ற கன்னிகையாயிருக்கிற மாதாவே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 
கன்னி சுத்தங்கெடாத மாதாவே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 
மகா அன்புக்குப் பாத்திரமாயிருக்கற மாதாவே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 
ஆச்சரியத்துக்குரிய மாதாவே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 
நல்ல ஆலோசனை மாதாவே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 
சிருஷ்டிகருடைய மாதாவே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 
இரட்சகருடைய மாதாவே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 
மகா புத்தியுடைத்தான கன்னிகையே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 
மகா வணக்கத்துக்குரிய கன்னிகையே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 
பிரகாசமாய் ஸ்துதிக்கப்பட்ட யோக்கியமாயிருக்கிற கன்னிகையே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 
சக்தியுடைத்தவளாயிருக்கிற கன்னிகையே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 
தயையுள்ள கன்னிகையே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 
விசுவாசியாயிருக்கிற கன்னிகையே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். 
தருமத்தின் கண்ணாடியே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 
ஞானத்துக்கு இருப்பிடமே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 
எங்கள் சந்தோஷத்தின் காரணமே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 
தேவ இரகசியத்தைக் கொண்டிருக்கிற ரோஜா புஷ்பமே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 
ஞான பாத்திரமே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 
மகிமைக்குரிய பாத்திரமே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 
அத்தியந்த பக்தியுடைத்தான பாத்திரமே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 
தாவீது இராஜாவுடைய உப்பரிகையே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 
தந்த மயமாயிருக்கிர உப்பரிகையே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 
சொர்ண மயமாயிருக்கிற ஆலயமே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 
வாக்குத்தத்தத்தின் பெட்டகமே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 
பரலோகத்தினுடைய வாசலே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 
விடியக்காலத்தின் நட்சத்திரமே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 
வியாதிக்காரருக்கு ஆரோக்கியமே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 
பாவிகளுக்கு அடைக்கலமே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 
கஸ்திப்படுகிறவர்களுக்கு தேற்றரவே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 
கிறிஸ்தவர்களுடைய சகாயமே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 
சம்மனசுக்களுடைய இராக்கினியே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 
பிதா பிதாக்களுடைய இராக்கினியே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 
இறைவாக்கினர்களுடைய இராக்கினியே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 
அப்போஸ்தலர்களுடைய இராக்கினியே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 
மறைசாட்சிகளுடைய இராக்கினியே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 
துதியர்களுடைய இராக்கினியே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 
கன்னியர்களுடைய இராக்கினியே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 
அனைத்துப் புனிதர்களுடைய இராக்கினியே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 
ஜென்ம பாவமின்றி உற்பவித்த இராக்கினியே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 
பரலேகத்துக்கு ஆரோபணமான இராக்கினியே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 
திருச் செபமாலையின் இராக்கினியே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 
சமாதானத்தின் இராக்கினியே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 
உலகத்தின் பாவங்களை போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே — எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி. 
உலகத்தின் பாவங்களை போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே 
— எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி. 
உலகத்தின் பாவங்களை போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே — எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி. 
சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே ! இதோ உம்முடைய சரணமாக ஓடிவந்தோம். எங்கள் அவசரங்களிலே நாங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்குப் பாராமுகமாய் இராதேயும். 
ஆசீர்வதிக்கப்பட்டவளுமாய் மோட்சமுடையவளுமாயிருக்கிற நித்திய கன்னிகையே ! சகல ஆபத்துக்களிலேயும் நின்று எங்களைத் தற்காத்துக் கொள்ளும். -ஆமென். 
இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதியுள்ளவர்கள் ஆகும்படி, சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். 
ஜெபிப்போமாக : 
                   இறைவா! முழுமனதோடே தெண்டனாக விழுந்துகிடக்கிற இந்த குடும்பத்தைப் பார்த்து எப்பொழுதும் பரிசுத்த கன்னியான மரியாளுடைய வேண்டுதலினாலே, சகல சத்துருக்களின் சற்பனையிலே நின்று பிரசன்னராய்த் தயை செய்து இரட்சியும். இந்த மன்றாட்டுக்களை எல்லாம் எங்கள் ஆண்டவரான இயேசுநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும். -ஆமென் 
மிகவும் இரக்கமுள்ள தாயே 
மிகவும் இரக்கமுள்ள தாயே! உமது அடைக்கலமாக ஓடி வந்து, உம்முடைய உபகார சகாயங்களை இரந்து, உம்முடைய மன்றாட்டுகளின் உதவியைக் கேட்ட ஒருவனாகிலும் உம்மால் கைவிடப்பட்டதாக ஒரு போதும் உலகத்தில் சொல்லக் கேள்விப்பட்டதில்லை என்று நினைத்தருளும். கன்னியருடைய இராக்கினியான கன்னிகையே, தயையுள்ள தாயே, இப்படிப்பட்ட நம்பிக்கையால் ஏவப்பட்டு உம்முடைய திருப்பாதத்தை அண்டி வருகிறேன். பெருமூச்செறிந்து அழுது பாவியாகிய நான் உமது தயாளத்துக்குக் காத்துகொண்டு உமது சமூகத்திலே நிற்கிறேன். அவதரித்த வார்தையின் தாயே! என் மன்றாட்டைப் புறக்கணியாமல் தயாபரியாய்க் கேட்டுத்தந்தருளும். - ஆமென். 
ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த அர்ச் மரியாயே! பாவிகளுக்கு அடைக்கலமே! இதோ உம்முடைய அடைக்கலமாக ஓடி வந்த்தோம். எங்கள் பேரில் இரக்கமாயிருந்து எங்களுக்காக உம்முடைய திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும். 
அருள் நிறைந்த மரியாயே… 
( மும்முறை செபிக்க )
Prayers
- Rosary
- Infant Jesus
- Infant Jesus
- Sacred Heart
- St. Anthony
- Velankanni Matha
- வே ளாஙகணண மாதாவகக நவநாள ஜெ பம
- குடும்பங்களுக்கான ஜெபம்
- திருப்பலி
- The Joyful Mysteries
- ஒளி மறையுண்மைகள்
- துயர மறையுண்மைகள்
- மகிமை மறையுண்மைகள்
- விசுவாசப் பிரமாணம்
- இயேசு கற்பித்த செபம்
- மங்கள வார்த்தை செபம்
- திரித்துவப் புகழ்
- பாத்திமா ஜெபம்
- கிருபைதாயாபரத்துச் செபம்
- காணிக்கை செபம்
