Esther - Chapter 10
Holy Bible

1 மன்னர் அகஸ்வேர் நிலங்களின் மீதும், கடலின் தீவுகளின்மீதும் தீர்வை விதித்தார்.
2 அவருடைய ஆற்றலும் வலிமைமிகு செயல்களும், அவர் மொர்தக்காய்க்கு அளித்த மேன்மையின் முழு விவரமும், மேதியா மற்றும் பாரசீக மன்னர்களின் குறிப்பேட்டில் எழுதப்பட்டுள்ளன அல்லவா?
3 யூதராகிய மொர்தக்காய், மன்னர் அகஸ்வேருக்கு அடுத்த நிலைபெற்று, யூதருள் மேன்மை நிறைந்தவராகவும், தம் சகோதரர் பலருக்கு இனியவராகவும், தம் மக்களின் நன்மையை நாடுபவராகவும், தம் இனத்தார் அனைவரின் நல்வாழ்வுக்காகப் பரிந்துரை செய்பவராகவும் விளங்கினார்

Holydivine