Rosary

Joyful Mysteries

1)கபிரியேல் தூதர் கன்னி மரியாவுக்குத் தூதுரைத்ததைத் தியானித்து, நாம் தாழ்ச்சியுடன் வாழ வரம் கேட்போமாக.
The Annunciation
Matthew 1:18-25
Luke 1:26-38
2) தேவ அன்னை எலிசபெத்தை சத்தித்ததைத் தியானித்து, நாம் பிறரன்பில் வளரச் செபிப்போமாக.
The Visitation
Luke 1:39-56
3) இயேசு பிறந்ததைத் தியானித்து, நாம் எளிமையாய் வாழச் செபிப்போமாக.
The Nativity
Matthew 2:1
Luke 2:1-20
4) இயேசுவைக் கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்ததைத் தியானித்து, நாம் இறை திருவுளத்திற்குப் பணிந்து நடக்கும் வரம் கேட்போமாக.
The Presentation
Luke 2:22-39
5) காணாமற் போன இயேசுவைக் கண்டடைந்ததைத் தியானித்து, நாம் இயேசுவை என்றும் தாகத்தோடு தேடும் வரம் கேட்டு செபிப்போமாக.

Sign of the Cross

தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே, அமென்.

Apostles Creed

பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனை விசுவசிக்கிறேன். அவருடைய ஏக சுதனாகிய நம்முடைய நாதர் இயேசு கிறிஸ்துவையும் விசுவசிக்கிறேன். இவர் பரிசுத்த ஆவியினால் கர்ப்பமாய் உற்பவித்து கன்னிமரியிடமிருந்து பிறந்தார். போஞ்சுபிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு, சிலுவையில் அறையுண்டு, மரித்து அடக்கம் செய்யப்பட்டார். பாதாளத்தில் இறங்கி மூன்றாம் நாள் மரித்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார். பரலோகத்திற்கு எழுந்தருளி, எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனுடைய வலது பக்கம் வீற்றிருக்கிறார். அவ்விடத்திலிருந்து சீவியரையும் மரித்தவரையும் நடுத்தீர்க்க வருவார். பரிசுத்த ஆவியை விசுவசிக்கிறேன். பரிசுத்த கத்தோலிக்க திருச்சபையை விசுவசிக்கிறேன். அர்ச்சியசிஷ்டவர்களுடைய சமூதீதப் பிரயோசனத்தை விசுவசிக்கிறேன். பாவப்பொறுத்தலை விசுவசிக்கிறேன். சரீர உத்தானத்தை விசுவசிக்கிறேன். நித்திய சீவியத்தை விசுவசிக்கிறேன். -ஆமென்.

Our Father

பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக. உம்முடைய இராட்ச்சியம் வருக. உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல, பூலோகத்திலும் செய்யப்படுவதாக.
எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும். எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பதுபோல, எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களைச் சோதனையில் விழவிடாதேயும். தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும். -ஆமென்.

Hail Mary

அருள் நிறைந்த மரியே வாழ்க! கர்த்தர் உம்முடனே. பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர் நீரே. உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே.
அர்ச்சிஸ்ட மரியாயே, சர்வேசுரனுடைய மாதாவே பாவிகளாயிருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும். -ஆமென்.

Glory Be

பிதாவுக்கும், சுதனுக்கும், பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக. ஆதியிலே இருந்ததுபோல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. -ஆமென்

Oh My Jesus

ஓஅ என் இயேசுவே எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்.


எங்களை நரக நெருப்பிலிருந்து இரட்சித்தருளும்.


சகல ஆத்துமாக்களையும் பரலோக பாதையில் நடத்தியருளும்.


உமது இரக்கம் அதிகமாய் வேண்டியவர்களுக்கு

விசேட உதவி செய்தருளும்.

Hail Holy Queen

கிருபைதயாபரத்துக்கு மாதாவாயிருக்கிற எங்கள் இராக்கினியே வாழ்க எங்கள்


சீவமே எங்கள் மதுரமே எங்கள் தஞ்சமே வாழ்க

பரதேசிகளாய் இருக்கிற நாங்கள் ஏவையின்
மக்கள் உம்மைப் பார்த்து கூப்பிடுகின்றோம்.


இந்தக் கண்ணீர் கனவாயிலிருந்து


பிரலாபித்து அழுது உம்மையே நோக்கிப் பெருமூச்சுவிடுகின்றோம்.


ஆதலால் எங்களுக்காக வேண்டி மன்றாடுகின்ற தாயே உம்முடைய தாயாபரமுள்ள
திருக்கண்களை எங்கள் மேலே திருப்பியருளும்.


இதனன்றியே நாங்கள் இந்தப் பிரதேசங் கடந்த பிற்பாடு


உம்முடைய திருக்குமாரனாகிய இயேசு நாதருடைய


பிரத்தியட்சமான தரிசனத்தை எங்களுக்கு தந்தருளும்.


கிருபாகரியே தயாபரியே பேரின்ப இரசமுள்ள கன்னி மரியாயே

முதல்: இயேசுகிறிஸ்து நாதருடைய திருவாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரமாயிருக்கத்தக்கதாக.

துணை: சாருவேசுரனுடைய பரிசுத்த தேவமாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

Final Prayer

அத்தியந்த மகிமையுள்ள பரலோக இராசேஸ்வரியான பரிசுத்த தேவமாதாவே


உம்முடைய திருபாதத்தை நாங்கள் நமஸ்கரித்து இந்தச் செபமாலைத் தியானத்தை


உமக்குப் பாத காணிக்கையாக வைத்து ஒப்புக்கொடுக்கின்றோம்.


இதை நீரே கையேற்று


உம்முடைய திருக்குமாரனிடத்திலே கையளித்து இதிலே நாங்கள் தியானித்த மறை


நிகழ்ச்சிகளுடைய பலனை அடையவும் சுகிரேத போதனையின் படியே நடந்து


இவ்வுலகத்திற் சகல விக்கினங்களும் நிவாரணமாகவும் பரலோகத்திலே உம்மோடே


உம்முடைய திருக்குமாரனுடைய மோட்சமுக தரிசனையைக் கண்டு களிகூர்ந்திருக்கவும்


ஒத்தாசை பண்ணியருளும் தாயாரே. ஆமென்

Daily Refelections

Holydivine